

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நான் மேற்கொண்ட நமக்கு நாமே பயணத்தை நவம்பர் 3-வது வாரத்தில் சென்னையில் முடிக்க திட்டமிட்டிருந்தோம். கனமழை வெள்ளத்தால் தள்ளிவைக்கப்பட்ட இந்த பயணத்தை, ஜனவரி முதல் வாரம் தொடங்கவுள்ளேன். சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து உரையாட இருக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011-ல் பதவியேற்றதும் வாரந்தோறும் செய்தியாளர்களை சந்திப்பேன் என்றார். ஆனால், அவரும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களும் அவரை சந்தித்து கேள்வி கேட்கவில்லை. இதைத்தான் விஜயகாந்த் கேட்டுள்ளார். செய்தியாளர்கள், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கேள்வி கேட்க வேண்டும் என்றார்.