Published : 07 May 2021 04:05 PM
Last Updated : 07 May 2021 04:05 PM

அகில இந்திய அளவில் ஊடகங்களில் பேசப்படும் திமுகவின் இரண்டு துறை அமைச்சர்கள்

சென்னை

திமுக அமைச்சரவை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று பொறுப்பேற்றுள்ளது. இதில் 2 அமைச்சர்கள், அவர்கள் துறை குறித்த அலசல் அகில இந்திய ஊடகங்களில் பேசுபொருளானது

கடந்த ஆண்டு கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலானது. ஊரடங்கு அமலானதால் சாதாரணக் கடைநிலை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.5000 வழங்க திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர்.

மேலும் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சரின் பணியும், சுகாதாரத்துறைச் செயலரின் பணியும் ஊடகங்களில் பெரிதாகப் பேசப்பட்டது. கரோனா தொற்றைத் திறம்படக் கையாளவில்லை என திமுக குற்றம் சாட்டி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.4000 கொடுப்போம் என அறிவித்தது.

தற்போது தேர்தல் நேரத்தில் மீண்டும் கரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வரலாறு காணாத அளவில் கரோனா பெருந்தொற்று நிலவுகிறது. தமிழகத்தின் நிதி நிலையும் மோசமாக உள்ளது. கரோனா பெருந்தொற்றையும், அளித்த வாக்குறுதிகளையும் புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் புதிய அரசு பொறுப்பேற்கும் முன்னரே நிதியமைச்சராக யார் வருவார் என்கிற கேள்வி அனைவர் முன்னும் எழுந்தது. நிதியமைச்சராக துரைமுருகன் நியமிக்கப்படுவார் என ஒரு சாரரும், நிதி போன்ற விஷயங்களில் சிறப்பாகச் செயல்படும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்படுவார் என்றும் பேசப்பட்டது.

அதேபோல் கரோனா பரவலைச் சமாளிக்க யாரை சுகாதாரத் துறைச் செயலராக நியமிப்பார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. அதில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சுகாதாரத்துறை அமைச்சராக முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த இரண்டு துறைகளின் அமைச்சர்கள் அவர்களது செயல்பாடு குறித்தே வட இந்திய ஊடகங்களும் அலசின.

தமிழகத்தில் முக்கியப் பிரச்சினையாக உள்ள கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்எ வ்வாறு செயல்படப்போகிறார், சென்னையின் மேயராக சென்னையின் சுகாதார நடவடிக்கைகளில் செயல்பட்ட அனுபவம் மிக்க மா.சுப்பிரமணியன் தமிழகம் முழுவதும் உள்ள கரோனா பரவலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று அலசப்பட்டது.

நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பொருளாதாரம் சார்ந்த அறிவு பெற்றவர், அதுசார்ந்து படித்துள்ளவர், நடைமுறையில் அமல்படுத்திய்வர் என்கிற முறையில் அவர் சிறப்பாகச் செயல்படுவாரா என்றும் அகில இந்திய ஊடகங்களில் அலசப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x