Last Updated : 04 Dec, 2015 02:13 PM

 

Published : 04 Dec 2015 02:13 PM
Last Updated : 04 Dec 2015 02:13 PM

சென்னை தனியார் மருத்துவமனையில் 14 நோயாளிகள் பலி

சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 9 ஆண்கள் 5 பெண்கள் உட்பட 14 நோயாளிகள் பலியாகினர்.

அவர்களது உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. இறப்புக்கான உண்மைக்காரணம் இன்னும் தெரியவில்லை.

சென்னை மனப்பாக்கத்தில் உள்ளது மியாட் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் பலியாகினர். அவர்களது உடல் தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநர் கீதாலட்சுமி கூறும்போது, "14 சடலங்கள் மியாட் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. 14 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும். அனைவரும் இயற்கை மரணமெய்தியதாகவும் மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால், மியாட் மருத்துவமனையைச் சேர்ந்த நிர்வாகிகளோ மருத்துவர்களோ யாரும் இங்கு நேரில் வரவில்லை. இறந்தவர்களின் மருத்துவ சிகிச்சை குறிப்பு புத்தகங்கள் ஏதும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, மருத்துவமனை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு இறப்புக்கான உண்மைக் காரணத்தை அறிய முற்பட்டுள்ளோம்" என்றார்.

இதற்கிடையில், கடந்த 2 நாட்களில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 45 சடலங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சிறப்பு ஹெல்ப்டெஸ்க் அமைத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x