மழைக்கு பலியான 22 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மழைக்கு பலியான 22 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
Updated on
1 min read

மழைக்கு பலியான 22 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் தாவடிப் பட்டு தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் மாவட்டம் கோங்கல் வெங்கடேசன், கொத்தப்பாளையம் சந்தோஷ், புங்கத்தூர் பாபு, திருவண்ணாமலை மாவட்டம் கண்டவராட்டி ஆகாஷ், வேலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் இந்திரன், காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் ஹேம மாலினி, சிட்லப்பாக்கம் செல்லன், சித்தமனூர் தெய்வசிகாமணி, கீழ்க் கரணை சந்திரசேகர், திருக்கழுக் குன்றம் ஜீவா நகர் வேதகிரி ஆகி யோர் கன மழையினால் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குமரெட் டையாபுரம் தாமோதரன், வேலூர் மாவட்டம் அரும்பாக்கம் ராஜா மணி, தேனி மாவட்டம் கம்பம் சாவித்திரி, விழுப்புரம் மாவட்டம் பூத்துறை ஆனந்த், சோழகனூர் அஸ்வின், மதுரை மாவட்டம் வெயில்வந்தாபுரம் தாமரைச் செல்வி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள் ளனர்.

சென்னை நொச்சிகுப்பம் வேலு கடலில் மூழ்கியும், திருவள்ளூர் பெத்திக்குப்பம் பாலாஜி, வெங்கத்தூர் குமார், சென்னை மயிலாப்பூர் ஜான்சன் ஆகியோர் மின்சாரம் பாய்ந்தும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் பாரதி, பாலத்தில் இருந்து தவறி விழுந்தும் உயிரிழந்துள்ளனர். பலியான 22 பேர் குடும்பத்துக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in