

தமிழகத்தில் இன்று கரோனா தொற்று 24 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 6,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 12,97,500 பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 12,97,500. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 3,70,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11,51,058.
இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 27 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 41,44,556.
சென்னையில் 6,678 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 18,220 பேருக்குத் தொற்று உள்ளது. மொத்த தொற்றில் சென்னையில் மட்டும் 26% தொற்று உள்ளது. மற்ற 37 மாவட்டங்களில் 74% தொற்று உள்ளது.
* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 197 தனியார் ஆய்வகங்கள் என 266 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று (மே 03) பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,31,468.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,35,45,987.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,52,130.
* தமிழகத்தில் மொத்தம் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,97,500.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 24,898.
* சென்னையில் இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,678.
* சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 33,316.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 7,82,299 பேர். பெண்கள் 5,15,163 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 14,683 பேர். பெண்கள் 10,215 பேர். மூன்றாம் பாலினத்தவர் இல்லை.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 21,546 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 11,51,058 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 195 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 81 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள். 114 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள். இந்நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,974 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 5,021 பேர் உயிரிழந்துள்ளனர். இது மொத்த உயிரிழப்பில் 33% ஆகும்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 150 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 45 பேர்".
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.