Published : 06 May 2021 04:49 PM
Last Updated : 06 May 2021 04:49 PM

ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள்: மா.சு.க்கு சுகாதாரத் துறை; பிடிஆர் தியாகராஜனுக்கு நிதித் துறை

சென்னை

நாளை முதல்வராகப் பதவி ஏற்கும் ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். 2 பெண்கள், 2 சிறுபான்மையினர் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளனர். நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும், சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்பிரமணியனும் பொறுப்பேற்க உள்ளனர்.

1. ஸ்டாலின் - முதல்வர் (பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, , மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்ட செயலாக்கம் மாற்றுத் திறனாளிகள் நலன்)
2. துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர்
3. கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்
4. பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்
5. பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்
6. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்
7. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத் துறை அமைச்சர்
8. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
9. தங்கம் தென்னரசு - தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர்
10. எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்
11. முத்துசாமி - வீட்டுவசதித்துறை அமைச்சர்
12. பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
13. தா.மோ.அன்பரசன் - ஊரக தொழில்துறை அமைச்சர்
14. சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர்
15. கீதாஜீவன் - சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர்
16. அனிதா ராதாகிருஷ்ணன் - மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
17. ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்
18. ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்
19. சக்ரபாணி - உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்
20. செந்தில் பாலாஜி = மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
21. ஆர்.காந்தி - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்
22. சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
23. பி.மூர்த்தி - வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
24. எஸ்.எஸ்.சிவசங்கர்- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
25. பழனிவேல் தியாகராஜன்- நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை
26. ஆவடி நாசர் - பால்வளத்துறை அமைச்சர்
27. செஞ்சி மஸ்தான் - சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

28. அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
29. மெய்யநாதன் - சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
30. சிவி கணேசன் - தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
31. மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
32. மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர்
33. கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
34. சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x