Published : 06 May 2021 03:12 am

Updated : 06 May 2021 04:59 am

 

Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 04:59 AM

நிலத்தடி நீர் வணிக மயத்தை தடுக்க வேண்டும்; மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்க கூடாது: மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் விஜய் சேதுபதி, அரிபரந்தாமன் குழுவினர் கோரிக்கை

vijay-sethupathy

சென்னை

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு சுற்றுச்சூழல் நீதி தொடர்பான 14 கோரிக்கைகளை, நடிகர் விஜய் சேதுபதி,ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியை வசந்தி தேவிஉள்ளிட்ட 67 பேர் அனுப்பி யுள்ளனர்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். இந்நிலையில், அவரது கவனத்துக்கு சுற்றுச்சூழல் நீதி தொடர்பான 14 கோரிக்கைகள் அடங்கியகடிதத்தை ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியை வசந்தி தேவி, நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட 67 பேர் இணைந்து அனுப்பியுள்ளனர்.


அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: தங்களின் பாராட்டத்தக்க வெற்றிக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். கரோனா நெருக்கடியின் வேர்கள் வளர்ச்சியின் பேரில் நிலத்தை அழிக்கும் திட்டங்களில் உள்ளது. கனமழை, வெப்ப அலைகள், நீண்டகால வறட்சி மற்றும் சூறாவளிகள் போன்ற கடும் வானிலை நிகழ்வுகள், புதிய இயல்பு நிலையாக மாறும்.

ஆயிரம் கி.மீ. கடற்கரைகொண்ட தமிழகம் கடல் மட்டம்உயர்வால் ஏற்படும் உப்புத்தண்ணீர் ஊடுருவல் மற்றும் நில இழப்பினால் பாதிக்கப்படும் பகுதியாகும். இந்த அழிவை நிறுத்தாவிட்டால், தமிழகம் அதிக பாதிப்புகளை சந்திக்கும்.

உங்கள் கூட்டணி சமத்துவம், பன்முகத்தன்மை, சூழலியல் நிலைத்தன்மை போன்ற கொள்கைகளுக்கு ஆதரவளித்து, சூழலியல் பாகுபாடு மற்றும் அநீதிக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்துள்ள விசிக, மதிமுக, மமக மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கியதாகும்.

நாட்டின் வலிமையான சுற்றுச்சூழல் சட்டங்களை கொண்டு வந்து வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரத்தில் , கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பாணை போன்ற சட்டங்கள் அளிக்கும் பாதுகாப்பை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது.

எனவே, சமத்துவம், சமூக நீதிக் கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றால், தமிழகம் இன்னும் வலிமையான சட்டங்களை நிறைவேற்றி, தகுந்த சூழலியல் மேற்பார்வையை இங்கு கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக, வேதாந்தா ஆலைதிறக்கப்படக் கூடாது, சேலம் 8வழிச்சாலை, காட்டுப்பள்ளி அதானிதுறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன்முனையம், சித்தூர்- தச்சூர் 6 வழிச்சாலை திட்டம், கூடங்குளத்தில் 4 கூடுதல் அணு உலைகள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.

வேடந்தாங்கல் சரணாலயம், பழவேற்காடு சரணாலயத்தில் எல்லை குறைப்பு திரும்ப பெறவேண்டும். இந்துஸ்தான் நிறுவனத்தின் கொடைக்கானல் தொழிற்சாலை தூய்மைப்படுத்தப்பட வேண்டும். மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது.

நிலத்தடிநீரின் வணிக பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நகர மக்களை, தூர பகுதிகளுக்கு வெளியேற்றுவது தடுக்கவேண்டும். கடற்கரை மண்டலஒழுங்குமுறை அறிவிப்புகளுக்காக மாநில அளவில் சட்டம் இயற்றுதல் வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டுள்ளன.


நிலத்தடி நீர்மரபணு மாற்ற விதைவிஜய் சேதுபதிஅரிபரந்தாமன் குழுவினர்மு.க.ஸ்டாலின்Vijay sethupathy

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x