Published : 25 Jun 2014 09:58 AM
Last Updated : 25 Jun 2014 09:58 AM

திருநின்றவூரில் 8 மணி நேர மின்வெட்டு - தவிக்கும் மக்கள்: சென்னை கோட்டத்துடன் இணைக்க வலியுறுத்தல்

திருநின்றவூர் பகுதியில் தின மும் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தங்கள் பகுதியை சென்னை மின்கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையின் புறநகர் பகுதி களில் ஒன்றான திருநின்றவூர், நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகும். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட இந்தப் பகுதியில் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் அதிகம் உள்ளன.

டாடா ஸ்டீல், டிஐ மெட்டல் பார்மிங் உள் ளிட்ட தொழிற்சாலைகளும் உள்ளன. திருநின்றவூர் கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், தாசர்புரம் போன்ற பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து, மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, திருநின்றவூர் கிருஷ்ணாபுரம் குடியிருப்போர் பொதுநலச் சங்கத் தலைவர் முருகையன் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

திருநின்றவூர் வடக்குப் பகுதி பிரிவு மின்வாரிய அலுவலகத் துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், தாசர்புரம், சிடிஎச் சாலை ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மின்தடை குறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கிருஷ்ணாபுரம் காவல் நிலை யம் அருகில் இருக்கும் டிரான்ஸ் பார்மர் மற்றும் சிடிஎச் சாலையில் உள்ள அனைத்து டிரான்ஸ் பார்மர்களும் முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழு தடைந்து மின்தடை ஏற்படுகிறது.

இந்த டிரான்ஸ்பார்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டன. அப்போது, இப்பகுதியில் குறைவான வீடுகளே இருந்தன. தற்போது வீடுக ளின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளதால், பழைய டிரான்ஸ் பார்மர்களின் வோல்டேஜ் திறன் போதவில்லை.

தினமும் 8 மணி நேரம் வரை மின்வெட்டு அமல் படுத்தப்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப் படுகின்றனர். இரவிலும் மின் தடை ஏற்படுவதால் புழுக்கத்தில் தூக்க மின்றி தவிக்கின்றனர். இந்தப் பகுதிக்கான மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் செங்கல்பட்டிலும், கோட்ட மின்பொறியாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதூரிலும் உள்ளன. ஏதாவது புகார் தெரிவிக்க வேண்டுமென்றால், 30 முதல் 40 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த அலுவல கங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, திருநின்றவூர் வடக்கு பிரிவு மின்வாரிய அலுவல கத்தை சென்னை மின்விநியோக வட்டம் மேற்கு ஆவடி கோட்டத் துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு முருகையன் கூறினார்.

திருநின்றவூர் மின்வாரிய உதவிப் பொறியாளர் லவகுமாரி டம் கேட்டபோது, மின்விநியோகத் தில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக சில நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. தற்போது அனைத்துப் பகுதிகளிலும் மின்நுகர்வின் அளவுக்கு ஏற்ப அதிக திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை அமைத்து வருகிறோம். ஆவடி கோட்டத் துடன் திருநின்றவூரை இணைக்க வேண்டும் என்பது குறித்து துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x