Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

சட்டப் பல்கலை. முதல் துணைவேந்தர் பேரா. பி.நாகபூஷணம் காலமானார்

தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான பேராசிரியை பி.நாகபூஷணம்(78) கரோனா பாதிப்பால் சென்னையில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் கடந்த 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் துணைவேந்தராக பேராசிரியை பி.நாகபூஷணம் நியமிக்கப்பட்டு 2000-ம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.

நாகபூஷணத்தின் கணவர் கிருஷ்ண செட்டி அரசியலமைப்புச் சட்ட நிபுணர். அவர் 5 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். சென்னை மந்தைவெளியில் உள்ள தனது இல்லத்தில் நாகபூஷணம் வசித்து வந்தார்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவு காலமானார். அவரது உடல் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

நாகபூஷணத்தின் மறைவையொட்டி சட்டப் பல்கலைக்கழகத்தில் அவரது உருவ படத்துக்கு துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x