Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

பெண்ணைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த வழக்கறிஞர்; திருமங்கலத்தில் யோகா ஆசிரியை உடல் தோண்டி எடுப்பு: 11 வயது மகளை கொல்ல முயற்சித்ததாக கடிதத்தில் தகவல்

ஹரிகிருஷ்ணன்

மதுரை

மதுரை மாவட்டம், திருமங்கலம் கற்பக நகரைச் சேர்ந்த வழக் கறிஞர் ஹரிகிருஷ்ணன் (46). சிலம்பம் கற்று கொடுக்கும் ஆசிரியராக இருந்தார். வீட்டில் சிறுவர், சிறுமிகளுக்கு சிலம்பப் பயிற்சி அளித்தார். இவரது மனைவி விஜயலட்சுமி. மதுரை முனிச்சாலையை சேர்ந்தவர்.

12 ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது. இவர்களுக்கு மகள் ஹரிப்பிரியா (11) உள்ளார்.

கருத்து வேறுபாடு காரணமாக, விஜயலட்சுமி கணவர், மகளை விட்டு 6 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில், சிலம்பம் பயிலும் சிறுவர்களுக்கு யோகா கற்றுத்தரத் திட்டமிட்ட ஹரிகிருஷ்ணன், 3 ஆண்டுக்கு முன்பு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சித்ராதேவி (35) என்ற யோகா ஆசிரியையை நியமித்தார். இந்நிலையில், இரு வருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே திருமணம் ஆன அவரை, திருமணம் செய்யும் அளவுக்கு பழகினார். இதற்கிடையே சிறுமி ஹரிபிரியாவைக் கவனிப்பது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை இருந்தது.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் சித்ராதேவி திடீ ரென மாயமானதாக அவரது தந்தை கண்னையா திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று முன் தினம் காலை ஹரிகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீஸார் அவரது உடலை மீட்டு விசாரித்தனர்.

அவரது வீட்டில் போலீஸார் சோதனை நடத்தியதில் ஹரி கிருஷ்ணன் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘‘மனைவி பிரிந்த நிலையில், குழந்தைக்காக சித்ராதேவியுடன் சேர்ந்து வாழத் திட்டமிட்டேன். ஆரம்பத்தில், எனது மகளை நன்றாக கவனித்த அவர் பின்னர் சரியாக கவனிக்கவில்லை.

இது தொடர்பாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும், ஒரு கட்டத்தில் எனது மகளை அவர் கொலை செய்யும் அளவுக்கு துணிந்தார். வேறு வழியின்றி அவரைக் கொலை செய்தேன். பின்னர், அவரது உடலை வீட்டு குளியல் அறையில் புதைத்தேன். இதற்கு மேல் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்பதால் நானும் தற்கொலை செய்கிறேன். எனது மகளை விஜயலட்சுமியிடம் ஒப் படையுங்கள்’’ எனக் குறிப்பிட்டு இருந்தது. பின்னர் காவல் ஆய்வாளர் செல்லபாண்டியன், திருமங்கலம் வட்டாட்சியர் (பொறுப்பு) திருமலை முன்னி லையில் நேற்று காலை சித்ரா தேவியின் உடலை தோண்டி எடுத்தனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான குழு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்தது. அதன்பின் சித்ராதேவியின் உடலை பெற் றோரிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x