கரோனா கட்டுப்பாடுகளால் மதுரையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: மாட்டுத்தாவணி மலர் சந்தையில் குப்பையில் கொட்டுகிறார்கள்

கரோனா கட்டுப்பாடுகளால் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களை குப்பையில் கொட்டும் விவசாயி.
கரோனா கட்டுப்பாடுகளால் பூக்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்களை குப்பையில் கொட்டும் விவசாயி.
Updated on
1 min read

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கோயில் திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மல்லிகை கிலோ ரூ.100-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.80, பிச்சி பூ ரூ.100, சம்பங்கி கிலோ - ரூ.10, செவ்வந்தி கிலோ ரூ.40, அரளி - ரூ.100, செண்டு மல்லி ரூ.20, ரோஸ் கிலோ ரூ.50-க்கும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு பூக்களை அனுப்ப முடியாத நிலையிலும் பூக்கள் தேங்கியுள்ளதால் மாட்டுத் தாவணி மலர்ச்சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

பூக்களின் விலை வீழ்ச்சி கார ணமாக போக்குவரத்து மற்றும் பூக்கள் பறிப்புக்கான கூலி கூட வழங்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளதாக விவசாயிகளும், வியாபாரிகளும் கவலை அடைந் துள்ளனர். இதனையடுத்து பூக் களுக்கு போதிய விலை இல்லாத நிலையில் பூக்களை குப்பைகளில் கொட்டிச் செல்லும் நிலை ஏற் பட்டுள்ளது.

ஊரடங்கால் பூக்களைப் பறித்து செண்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்ப முடியாத நிலை ஏற்படும் என்பதால் பிற்பகல் 3 மணி வரை பூ வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in