சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மேலும் 2 நாட்கள் விடுமுறை; பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் மேலும் 2 நாட்கள் விடுமுறை; பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இடைவிடாது பெய்த கனமழையை தொடர்ந்து மீட்பு பணிகளும் நிவாரணங்களும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பள்ளி, கல்லூரி வளாகங்களை தூய்மைப்படுத்த வேண்டிய பணி உள்ளதால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 14 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி தேர்வுகள் டிசம்பர் 13 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதே போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்லூரிகளைத் தவிர, பிற கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பதிவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in