Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM
திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி, புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நகர்ப்புற அரசு மருத்துவமனையை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டையில் 2 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், தினசரி ஆயிரக்கணக் கானோர் பல்வேறு பணிகள் தொடர்பாக புதுக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முள்ளூர் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை ஏற்படுத்தப்பட்ட பிறகு, நகரில் இயங்கி வந்த முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை காலி செய்யப்பட்டது. இங்குள்ள, கட்டிடங்களில் மருத்துவ அலுவலர்களின் அலுவலகங்கள், காசநோய் பிரிவு, மனநல ஆலோசனை மையம், புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிறு சிறு பாதிப்பு களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் நகர்ப்புற அரசு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக் களும், சமூக ஆர்வலர்களும் வலி யுறுத்தி வருகின்றனர். இதற்காக போராட்டங்களையும் நடத்தி உள் ளனர். எனினும், இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே, இந்த கோரிக் கையை நிறைவேற்றுவதாக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள திமுக, தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளதால், முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள கட்டிடங்களில் நகர்ப்புற அரசு மருத்துவமனையை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுக்கோட்டை நகர்ப்புற மக்கள், சமூக ஆர்வலர் கள் கூறியது:
புதுக்கோட்டையில் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவமனை இருந்தாலும், அதை மேல் சிகிச் சைக்கான இடமாகவே மக்கள் பார்க்கின்றனர். சிறு சிறு பாதிப்பு களுக்கு நகரிலேயே அரசு மருத்து வமனை இருந்தால்தான் உடனடி யாக சிகிச்சை பெற முடியும்.
இந்தக் கோரிக்கையை நிறை வேற்றித் தருவதாக, கடந்த 2018 மார்ச் மாதம் புதுக்கோட்டை முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பிலான சிகிச்சை மையம் திறப்பு விழா வில், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதி அளித்தனர். அதன்பின்னர், அரசாணையும் வெளியிடப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், மருத்து வமனை ஏற்படுத்தப்படவில்லை.
இங்கு அரசு மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டால், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என கருதி நகரில் உள்ள சில தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் இதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டதாகவும், அதனாலேயே மருத்துவத் துறை அலுவலர்களும் இதில் முனைப்பு காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தற்போதைய கரோனா பரவல் காலத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முத்துலட்சுமி ரெட்டி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் காலியாக உள்ள கட்டிடங்களில் நகர்ப்புற மருத்துவமனை ஏற்படுத் தப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எனவே, தற்போது ஆட்சிய மைக்க உள்ள திமுக அரசு புதுக்கோட்டை நகரில் 100 படுக்கைகள், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி போன்ற பல்வேறு வசதிக ளுடன் கூடிய முழு நேர மருத்துவ மனையை உடனடியாக தொடங்க வேண்டும். இதுதவிர, முதிய வர்களுக்கான சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற தொடர் சிகிச் சையையும், மருந்து மாத்திரை களையும் இங்கேயே வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT