Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

தேர்தல் வெற்றி தோல்விகளால் கட்சியின் நோக்கம் தடைபடாது: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

சென்னை

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், சென்னையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் துணைத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலாளர் குமாரவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கமல்ஹாசன் பேசியதாவது:

மக்கள் நீதி மய்யம் கட்சி என்பதுஎனது குழந்தைகளைப் போலவே எனக்கு இன்னொரு குழந்தை. நான் பெரும் கூட்டத்துக்கு மத்தியில் பாராட்டு வாங்குவதற்கோ, கைதட்டல்கள் வாங்குவதற்கோ சொன்ன சொல் இல்லை.எனது எஞ்சிய காலம் மக்களுக்கானது என்று சொன்ன சொல் என் வாழ்வியல் உண்மை.

எனவே, இந்தக் கட்சி முன்னிலும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் மக்கள் பணியாற்றும் என்பதைஉறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

ஒரு தேர்தலின் வெற்றி தோல்விகட்சியின் நோக்கத்தை தடுத்து விட முடியாது. கட்சியை சீரமைக்கும் பணியை மிக விரைவில் செய்யஇருக்கிறேன். அது சற்று கடுமையாகவே இருக்கும். என்னோடு பயணிக்க விருப்பமில்லாதவர்கள் வெளியேறவும், விரும்புபவர்கள் உள்ளே வரவும் இரண்டு கதவுகளையும் எப்போதும் நான் திறந்தேவைத்திருக்கிறேன்.

எனவே, அவரவர் தங்களுக்கான முடிவுகளை தாங்களே எடுத்துக்கொள்ளலாம். இந்த தேர்தல் நமக்கு ஒரு அனுபவமே. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு முன்னிலும் வேகமாக கட்சி, மக்கள் பணியாற்றும். விரைவில் கட்சிக்கு புத்துணர்ச்சியளிக்கும் புதிய முடிவுகளை அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x