Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கல்விக்கடனை செலுத்தவில்லை என்றால் வீட்டை ஏலம் விடப்போவதாக மிரட்டும் வங்கி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த ஹாஜா முகைதீன் மற்றும் அவரது குடும்பத்தினர்.

ராமநாதபுரம்

கல்விக்கடனைச் செலுத்தா விட்டால் வீட்டை ஏலம் விடப் போவதாக வங்கி நிர்வாகம் மிரட்டுவதாக கீழக்கரையைச் சேர்ந்தவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஹாஜா முகைதீன் (60). இவர் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு: எனது மகன் பல் மருத்துவம் படிக்க கீழக்கரையில் உள்ள தனியார் வங்கியில் வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றோம். தற்போது கடன் தொகையை உடனடியாகச் செலுத்தாவிட்டால் வீட்டை ஏலம் விடப்போவதாக வங்கி நிர்வாகம் மிரட்டி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து ஹாஜா முகைதீன் கூறியதாவது: எனது மகன் பல் மருத்துவம் (பிடிஎஸ்) படிக்க 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை ரூ.7,20,000 கல்விக் கடன் வாங்கினோம். எனது மகன் படிப்பை முடித்து 2018 முதல் மாதம் ரூ.15,000 ஊதியத்தில் தனியார் பல் மருத்துவமனையில் பணிபுரிகிறார். அவரது ஊதியம் மூலம் வங்கிக்கு இதுவரை ரூ. 4,79,000 செலுத்தி உள்ளோம். ஆனால், ரூ.17.36 லட்சம் கடன் உள்ளது, அதை உடனடியாகச் செலுத்தாவிட்டால் நாங்கள் அட மானமாக வைத்த வீட்டை ஏலம் விடப் போவதாக வங்கி தரப்பில் மிரட்டல் விடுக்கின்றனர்.

வீடு எனது தாயார் பசீராபேகம் (80) பெயரில் உள்ளது. நான், எனது சகோதரர் உள்ளிட்டோர் கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம்.

வீட்டை ஏலம் விட முயற்சிக் காமல் கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x