Last Updated : 05 May, 2021 03:13 AM

 

Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

மாவட்டத்தில் 75 சதவீதம் வெற்றி: கட்சி பொறுப்புகளை பெறுவதில் தேனி திமுக நிர்வாகிகள் மும்முரம்

கடந்த பொதுத்தேர்தலில் தேனி மாவட்டத்தின் 4 தொகுதிக ளையும் பறிகொடுத்த திமுக தற் போதைய தேர்தலில் மூன்றை மீட்டெடுத்துள்ளது. இது குறித்து கட்சித் தலைமை மகிழ்ச்சி அடைந் துள்ளதால், கட்சியினர் பல்வேறு பொறுப்புகளை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் ஆண்டி பட்டி, பெரியகுளம், போடி, கம் பம் என்று 4 தொகுதிகள் உள்ளன. 2011 தேர்தலில் 4 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. எனவே திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தேனி மாவட்ட நிர்வாகிகளை கட்சித் தலைமை கடுமையாக கண்டித்ததுடன், அதி ருப்தியையும் வெளிப்படுத்தியது.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக வில் பிளவு ஏற்பட்டு அமமுக உருவானது. ஆண்டிபட்டி, பெரிய குளம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கதமிழ்ச் செல்வன், கதிர்காமு ஆகியோர் அமமுகவுக்கு சென்றனர். இதில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் 2019-ம் ஆண்டு இத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் 2 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. குறிப்பாக அதிமுகவின் கோட்டை என்று கூறக்கூடிய ஆண்டிபட்டியை திமுக கைப் பற்றியது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் மற்றும் கம்பத்தையும் திமுக கைப்பற்றியுள்ளது. கம்பத் தில் 42 ஆயிரத்து 413 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மாவட்டத்தில் அதிக வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்ற பெருமையையும் கம்பம் பெற்றுள்ளது.

போடியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற் றாலும் வாக்கு வித்தியாசம் 11 ஆயிரத்து 21 என்ற அளவில்தான் உள்ளது. வெற்றிக்கு மிக அருகில் வந்தது திமுகவுக்கு ஓரளவுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11 ஆயிரத்து 114 வாக்குகளும், அமமுக வேட்பாளர் மு.முத்துச்சாமி 5 ஆயிரத்து 649 வாக்குகளும் பெற்றுள்ளனர். இவ்வாறு அடுத்தடுத்த நிலையில் உள்ள கட்சிகள் வாக்குகளை வெகுவாக பிரித்ததால் அதிமுக சிரமப்பட்டு வெற்றி பெறும் நிலை ஏற்பட்டது.

கடந்த தேர்தலில் மாவட்டத்தின் மொத்த தொகுதிகளையும் அதி முகவிடம் பறிகொடுத்த நிலை யில் தற்போது 3 தொகுதிகளை திமுக கைப்பற்றி உள்ளது. இது கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல கோஷ்டி பூசல்களுடன் மாவட்டத்தில் செயல்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள வெற்றி இவர்களை ஒருங்கிணைக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், அதிமுக வின் கோட்டை என்ற நிலை மாற்றப்பட்டுள்ளதால் கட்சித் தலைமையும் திருப்தி அடைந் துள்ளது. இதனால் தேனி மாவட்ட, ஒன்றியம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை கேட்டுப் பெறும் முனைப்பில் தற்போது அவர்களின் செயல்பாடுகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x