

திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவைச் சேர்ந்த இரு சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப் புள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் ஆறு முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வானவர் ஐ.பெரியசாமி. 1996 திமுக ஆட்சியின்போது அப் போதைய முதல்வர் கருணாநிதி யின் அமைச்சரவையில் ஊரகத் தொழில்துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
2006-ல் வருவாய்த்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ளார். மூத்த அமைச்சர்கள் பட்டியலில் இவ ருக்கு உறுதியாக இடம் உண்டு.
1996 தேர்தலில் முதன்முறையாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் அர.சக்கரபாணி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2001 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக மூன்று தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்ற நிலையில் அதில் ஒட்டன்சத்திரமும் ஒன்று.
2006 தேர்தலிலும் அர.சக்கரபாணி வெற்றிபெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால், அப்போதைய திமுக ஆட்சியில் அரசு கொறடா பதவி வழங்கப்பட்டது. 2011, 2016, 2021 என மீண்டும் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து ஆறு முறை சட்டப்பேரவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட் டவர் என்பதால் இவருக்கு அமைச் சரவையில் இடம் உண்டு என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருப்பதால், அர.சக்கரபாணிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக அமைச்சரவையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் இடம்பெறுவது உறுதி எனத் தெரிகிறது.