

திருவள்ளூர் அருகே கவனக்குறை வோடு தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி உட்பட 2 பேர் ரயில்கள் மோதி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் நந்தினி (20). இவர், திருவள்ளூர் அடுத்த அரண்வாயில்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வேப்பம்பட்டு ரயில்நிலை யம் அருகே செல்போனில் பேசியபடியே கவனக் குறைவாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது, சென்னை யில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார்.
இதேபோல், ஆவடியை அடுத்த பாலவேடுவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (41). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை வேப்பம் பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது, ரயில் தண்ட வாளத்தை கவனக் குறைவோடு கடக்க முயன்றார். அப்போது, சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் குறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.