தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்; ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: ப.சிதம்பரம் கருத்து

தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்; ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி: ப.சிதம்பரம் கருத்து
Updated on
1 min read

தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள் முழுக்க முழுக்க ஸ்டாலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்ததமிழக மக்களுக்கு நன்றி. திமுக தலைவர் ஸ்டாலின் பெருமுயற்சியாலும் உழைப்பாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஸ்டாலின் தலைமையில் திறமையான செம்மையான அரசு அமைய பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மம்தாவுக்கு வாழ்த்து

தேர்தல் முடிவுகளில் மத்திய அரசின் அதிகாரம், பண பலம், நிலை பிறழ்ந்த தேர்தல் ஆணையம் போன்ற நடவடிக்கைகளில் தன்னந்தனியாக மேற்குவங்கத்தில் போராடி வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இது பாஜக நச்சுக் கொள்கையை முறியடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

புதுச்சேரியில் காங்கிரஸ் தோல்வியடைந்தது கட்சிக்கு பெரிய இழப்புதான். இங்கு வெற்றி பெற்றவர், மனதிலும் வெளித்தோற்றத்திலும் காங்கிரஸ்காரர்தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்.

தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பணம் எல்லா தொகுதிகளிலும் வெற்றியை தீர்மானித்து விடாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in