

மதுரையில் போட்டியிட போராடி ‘சீட்’ பெற்ற ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான எஸ்.எஸ்.சரவணன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய மூன்று பேரும் தோல்வியடைந்தனர்.
அதேநேரத்தில் கே.பழனிசாமி ஆதரவாளர்களான செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன்செல்லப்பா, அய் யப்பன், பெரியபுள்ளான் ஆகிய 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் சசிகலா வுக்கு எதிராக தர்மயுத்தம் தொடங் கியபோது அவரது அணியில் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சரவணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், மதுரை எம்பி கோபாலகிருஷ்ணன் ஆகி யோர் இருந்தனர்.
அதன்பின், முதல்வராக இருந்த கே.பழனிசாமி தலைமையில் ஓ.பன்னீர் செல்வமும், அவரது ஆதரவு எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம், கடந்த மக்களவைத் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு போதிய அளவில் ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
குறிப்பாக மதுரை எம்பியாக இருந்த கோபாலகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட ‘சீட்’ கிடை்கும் என எதிர்பார்த்திருந்தார்.
ஆனால், அவருக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை. விரக்தியில் இருந்த அவருக்கு சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக ‘சீட்‘ பெற்று தருவதாக ஓ.பன்னீர்செல்வம் சமாதானம் செய்தார்.
மேலும், அதிமுக வழிகாட்டுதல் குழுவில் கோபாலகிருஷ்ண னையும், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கத்தையும் இடம்பெற செய்தார்.
அதனால், மதுரை மாவட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மதுரை கிழக்கில் கோபாலகிருஷ்ணனுக்கும், சோழவந்தானில் மாணி க்கத்துக்கும், மதுரை தெற்கில் எஸ்.எஸ்.சரணவனுக்கும் மீண்டும் ‘சீட்’ பெற்றுக் கொடுத்தார். இதில், தற்போது மூவரும் தோல்வி யடைந்துள்ளனர்.
வெற்றி பெற்றவர்கள்
அதே நேரத்தில் மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட செல்லூர் கே.ராஜூ, திருப்பரங்குன்றத்தில் போட்டி யிட்ட வி.வி.ராஜன் செல்லப்பா, திருமங்கலத்தில் போட்டியிட்ட ஆர்.பி.உதயகுமார், மேலூரில் போட்டியிட்ட பெரியபுள்ளான், உசிலம்பட்டியில் போட்டியிட்ட அய்யப்பன் ஆகிய கே.பழனிசாமி ஆதரவாளர்கள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்.
அதனால், மதுரை மாவட்ட அதிமுகவில் மீண்டும் கே.பழ னிசாமி கையே ஓங்கியிருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெற்றி பெறா ததால் அவர்களும், அவரது ஆதரவாளர்களும் சோகமடைந் துள்ளனர்.