Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

திருவண்ணாமலை மாவட்டத்தில் நோட்டாவுக்கு 12,331 வாக்குகள்: அமமுகவை பின்னுக்கு தள்ளியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நோட்டாவுக்கு 12,331 வாக்குகள் கிடைத்துள்ளன.

சட்டப்பேரவை, நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, ‘நோட்டா’வை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள், நோட்டாவை பயன்படுத்துமாறு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால், பல அரசியல் கட்சிகளை விட நோட்டாவுக்கு விழும் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திருவண் ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி களிலும் நோட்டாவுக்கு 12,331 வாக்குகள் விழுந்துள்ளன. இதில்அதிகபட்சமாக, தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் 2,194 வாக்குகளும், குறைந்தபட்சமாக, கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 961 வாக்குகளும் பதிவானது. நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை 5 தொகுதிகளில் அமமுகவும், ஒரு தொகுதியில் மக்கள் நீதி மய்யமும், 2 தொகுதிகளில் ஐஜேகேவும் பெற்றுள்ளன. 8 தொகுதிகளில் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை 88 வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

தி.மலை சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 2,194 வாக்குகள் பதிவானது. அமமுக உட்பட 11 வேட்பாளர்கள் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அமமுக 2,108 வாக்குகளை பெற்றுள்ளன.

போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,144 வாக்குகள் கிடைத்துள்ளன. அமமுக உட்பட 10 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அமமுக 656 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளன.

கீழ்பென்னாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 961 வாக்குகள் கிடைத்துள்ளன. நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை, 16 வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,690 வாக்குகள் கிடைத்துள்ளன. 10 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் குறை வான வாக்குகள் பெற்றுள்ளனர்.

செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,085 வாக்குகள் கிடைத்துள்ளன. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) உட்பட 11 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். ஐஜேகே 828 வாக்குகளை பெற்றுள்ளன.

கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,593 வாக்குகள் கிடைத்துள்ளன. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) உட்பட 11 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். ஐஜேகே 244 வாக்குகளை மட்டுமே பெற்றன.

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,895 வாக்குகள் கிடைத்துள்ளன. அமமுக உட்பட 11 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அமமுக 1,760 வாக்குகளை பெற்றுள்ளன.

வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவுக்கு 1,769 வாக்குகள் கிடைத்துள்ளன. அமமுக, மக்கள் நீதி மய்யம் உட்பட 8 வேட்பாளர்கள், நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அமமுக 1,728 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 1,692 வாக்குகளும் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x