Published : 04 May 2021 03:14 AM
Last Updated : 04 May 2021 03:14 AM

திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் டெபாசிட் தொகை இழந்த 152 வேட்பாளர்கள்

தி.மலை/திருப்பத்தூர்

தி.மலை, திருப்பத்தூர் மாவட் டங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 152 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை இழந்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, அமமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் உட்பட 122 பேர் போட்டியிட்டனர்.

வாக்குப் பதிவு கடந்த மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வேட்பு மனு தாக்கல் செய்த போது, செலுத்தப்பட்ட டெபாசிட் தொகையை திரும்பப் பெற, பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்கு பெற்றாக வேண்டும் என்பது தேர்தல் விதியாகும்.

அதன்படி, 8 தொகுதிகளில் போட்டியிட்ட திமுகவும், 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவும், 2 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவும், ஒரு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வும், தனது டெபாசிட் தொகையை தக்க வைத்துக் கொண்டன.

8 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற போதும் நாம் தமிழர் கட்சி, டெபாசிட் தொகையை இழந்துள்ளது. மேலும், தேமுதிக, அமமுக, ஐஜேகே, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் படுதோல்வியை சந்தித்து டெபாசிட் தொகையை இழந்துவிட்டன. மாவட்டத்தில் மொத்தம் 106 பேர், தங்களது டெபாசிட் தொகையை இழந்து விட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத் தில் திருப்பத்தூர், ஜோலார் பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் என 4 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்று, நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அன்றிரவு 10 மணிக்குள்ளாக 4 தொகுதிகளுக்கான முடிவு கள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக, திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 54 பேர் போட்டியிட்டனர். இதில், 4 தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 8 பேரை தவிர்த்து, 46 பேரும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.

அதேபோல, 4 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியை தவிர்த்த மற்ற அனைவரும் சொற்ப வாக்குகளை பெற்று படு தோல்வி யடைந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x