

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 158 தொகுதிகளில் வென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.
இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மரியாதைக்குரிய ஸ்டாலினுக்கும் திமுக வெற்றியாளர்களுக்கும் அமையவிருக்கும் புதிய அரசுக்கும் வாழ்த்துக்கள்..நல்லாட்சி நடக்கட்டும்.. நாட்டு மக்கள் நலம் பெறட்டும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் தனது மற்றொரு பதிவில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், நாம் தமிழர் கட்சி குறித்தும் பதிவிட்டுள்ளார். அதில் ‘மாற்று அரசியலை விரும்பி வாக்களித்து நாம் தமிழர் கட்சியை மூன்றாவது நிலைக்கு கொண்டு வந்திருக்கும் அனைத்து இளைஞர்கள் மற்றும் சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். நாதக வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் கட்சி வளர்ச்சியை கண்டிருக்கிறது. வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.