Published : 03 May 2021 05:08 AM
Last Updated : 03 May 2021 05:08 AM

15 ஆண்டுகளுக்கு பிறகு பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு வெற்றிமுகம்

சென்னை

திமுகவின் உதயசூரியன் சின்னத் தில் போட்டியிட்ட மதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 2006 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக 35 இடங்களில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அதன்பின் 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடு உள்ளிட்ட கார
ணங்களால் தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.

இதையடுத்து, 2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, 25 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. இதனால் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல், மதிமுகவுக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.

இதற்கிடையே, திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுகவுக்கு பல்லடம், மதுராந்தகம், மதுரை (தெற்கு), அரியலூர், வாசுதேவநல்லூர், சாத்தூர் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 6 தொகுதிகளிலும் அதிமுகவை நேரடியாக எதிர்த்து, திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட்டது.

இந்நிலையில், இத்தேர்தலில்மதிமுக 4 இடங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது. சாத்தூர் தொகுதியில் ஏஆர்ஆர் ரகுராமன், மதுரை தெற்கில் எம்.பூமிநாதன், வாசுதேவநல்லூ ரில் டி.சதன் திருமலைக்குமார், அரியலூரில் கே.சின்னப்பா ஆகியோர் வெற்றி பெற்றுள்ள னர். அதேநேரம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தான் போட்டியிட்ட மதுராந்தகம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

‘இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் மதிமுக, விசிக ஆகியகட்சிகள் இடம்பெற்ற கூட்டணி, வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதில்லை’ என்ற பேச்சு இருந்தது. அதையும் இத்தேர்தல் தகர்த்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x