Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அபாரம்: புதுச்சேரி முதல்வராகிறார் என்.ரங்கசாமி

புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர் தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக என்.ரங்கசாமி பொறுப் பேற்கிறார்.

புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெற்றது. நாரா யணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் முதல்வர் நாரா யணசாமிக்கும் இடையே தொடக்கத் தில் இருந்தே பனிப்போர் நிலவியது. யாருக்கு அதிகாரம் என்பதில் இரு வருக்கும் மோதல் ஏற்பட்டது. இத னால், 5 ஆண்டுகளாக புதுவையில் குழப்ப நிலை நீடித்தது.

ஆட்சிக்காலம் நிறைவடையும் தருவாயில் அமைச்சர்கள் உட்பட 6 பேர் ராஜினாமா செய்ததால், நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து குடி யரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

காங்கிரஸ் கோட்டை யாக விளங்கும் புதுச் சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பாஜக தீவிரமாக செயல் பட்டது. இதற்காக ரங்க சாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்தது.

தேர்தல் அறிவிக்கப் பட்டதும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாகின. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 9, அதிமுக 5 இடங்களிலும் போட்டியிட்டன. இதேபோல் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ்-14, திமுக-13, இந்திய கம்யூனிஸ்ட்-1, விசிக-1 ஆகிய கட்சிகள் போட்டி யிட்டன. இதுதவிர மக்கள் நீதி மய்யம் கட்சி, நாம் தமிழர், அமமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. சுயேச்சைகளையும் சேர்த்து 324 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

மத்தியிலும் மாநிலத் திலும் ஒரே ஆட்சி அமைந் தால் புதுச்சேரி வளர்ச்சி பெறும். சிறந்த புதுச் சேரியை உருவாக்குவோம் என்ற கோஷத்தை பாஜக வினர் முன்வைத்தனர். புதுச்சேரியை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பதாக காங்கிரஸார் பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின.

புதுச்சேரி மாநிலம் முழுவதும் 6 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. முடிவுகள் 3 கட்டங்களாக அறிவிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 6 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸுக்கு 2

மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி யில் காங்கிரஸ் 2 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. திமுக ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது. சுயேச்சைகள் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 இடங்களை பிடித்துள்ளது. பாஜக ஆதரவுடன்தான் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும்.

எனவே, அங்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி முதல்வராக பொறுப்பேற்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x