Published : 02 May 2021 10:35 PM
Last Updated : 02 May 2021 10:35 PM

மதுரை கிழக்கு தொகுதியில் 35 சுற்றிலும் முன்னிலை வகித்த திமுக வேட்பாளர்: 49,604 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுரை

மதுரை கிழக்கு தொகுதியில் 35 சுற்றிலும் முன்னிலை வகித்த திமுக வேட்பாளர் பி.மூர்த்தி 49,604 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்தார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் கொண்டது மதுரை கிழக்கு தொகுதி. இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக பி.மூர்த்தி போட்டியிட்டார். இவர் இதே தொகுதியில் 2011 தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் தமிழரசனிடம் தோற்றார்.

2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் தக்கார் பாண்டியைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் 3-வது முறையாகப் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் போட்டியிட்டார்.

இந்தத் தேர்தலில் 2,34,645 வாக்குகள் பதிவாகின. 3,300 தபால் வாக்குகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் 35 சுற்றுகளாக இன்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் மூர்த்தி முன்னிலையில் இருந்து வந்தார். இறுதியில் பி.மூர்த்தி 1,22,729 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனுக்கு 73,125 வாக்குகள் கிடைத்தன. 49,604 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரைத் தோற்கடித்து மூர்த்தி வெற்றிப்பெற்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெ.லதா, 17668 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஐ.முத்துகிருஷ்ணன் 11993 வாக்குகளும் பெற்றனர். அமமுக வேட்பாளர் டி.சரவணன், 6729 வாக்குகள் பெற்று 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நோட்டாவுக்கு 1944 வாக்குகள் கிடைத்தன.

மதுரை கிழக்கு தொகுதியில் மொத்தம் 3300 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில் 53 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. மீதமுள்ள தபால் வாக்குகளில் திமுகவுக்கு 2270, அதிமுகவுக்கு 537, நாம் தமிழர் கட்சிக்கு 164, மக்கள் நீதி மய்யத்துக்கு 129, அமமுகவுக்கு 93 வாக்குகள் கிடைத்தன. 53 தபால் வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

கி.மகாராஜன் / ஒய்.ஆண்டனி செல்வராஜ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x