Published : 02 May 2021 10:23 PM
Last Updated : 02 May 2021 10:23 PM

மேலூரில் 5-வது முறையாக வென்ற அதிமுக

மதுரை

மதுரை மேலூர் தொகுதியில் 2001, 2006, 2011, 2016 தேர்தல்களைத் தொடர்ந்து இந்தத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

மேலூர் தொகுதியில் 2001 முதல் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருகிறது. 2016 தேர்தலில் அதிமுக சார்பில் பெரியபுள்ளானும், திமுக சார்பிலும் ஏ.பி.ரகுபதியும் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் பெரியபுள்ளான் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் பெரியபுள்ளான் மீண்டும் போட்டியிட்டார். திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் டி.ரவிச்சந்திரன் போட்டியிட்டார். தேர்தலில் 1,81,784 வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகள் 26 சுற்றுகளாக இன்று எண்ணப்பட்டன.

இதில் பெரியபுள்ளானுக்கு 83,344 வாக்குகளும், ரவிச்சந்திரனுக்கு 48,182 வாக்குகளும் கிடைத்தன. இறுதியில் 35,162 வாக்குகள் வித்தியாசத்தில் பெரியபுள்ளான் வெற்றி பெற்று மேலூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

அமமுக வேட்பாளர் ஏ.செல்வராஜுக்கு 34,027 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் பி.கருப்பசாமிக்கு 10,606 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கே.கதிரேசனுக்கு 2,161 வாக்குகள் கிடைத்தன. நோட்டாவுக்கு 884 வாக்குகள் கிடைத்தன.

மேலூர் தொகுதியில் மொத்தம் 1,551 தபால் வாக்குகள் பதிவாயின. இதில் 553 வாக்குகள் செல்லாதவை. காங்கிரஸ் வேட்பாளருக்கு 455, அதிமுக வேட்பாளருக்கு 218, அமமுகவுக்கு 235, நாம் தமிழர் கட்சிக்கு 63, மக்கள் நீதி மய்யத்துக்கு 15 வாக்குகளும், நோட்டாவுக்கு 9 வாக்குகளும் கிடைத்தன.

கி.மகாராஜன் / ஒய்.ஆண்டனி செல்வராஜ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x