கோவை தெற்கு யாருக்கு?- வானதி முன்னிலை; கமல் பின்னடைவால் பரபரப்பு

கோவை தெற்கு யாருக்கு?- வானதி முன்னிலை; கமல் பின்னடைவால் பரபரப்பு
Updated on
1 min read

கோவை தெற்கு தொகுதியில் தற்போது வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து, கமல் பின்னடைவைச் சந்தித்திருப்பதால் வெற்றி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, கமல்தான் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, மநீம வேட்பாளர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அவருக்கு அடுத்த இடங்களை காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் பிடித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில சுற்றுகளாக வானதி சீனிவாசன் முன்னிலை வகித்து வருகிறார். 24-வது சுற்று முடிவில் 1,114 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி முன்னிலை வகித்து வருகிறார்.

அதாவது வானதி இதுவரை 48,270 வாக்குகள் பெற்றுள்ளார். கமல்ஹாசன் 47,156 வாக்குகளைப் பெற்றுள்ளார். இன்னும் 2 சுற்றுகள் எண்ணப்பட வேண்டி உள்ளதால் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in