‘‘மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள்’’- ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர், அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

‘‘ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in