Last Updated : 02 May, 2021 05:30 PM

Published : 02 May 2021 05:30 PM
Last Updated : 02 May 2021 05:30 PM

வெற்றியை உறுதி செய்த கே.என்.நேரு; திருச்சி மேற்குத் தொகுதியில் அனைத்துச் சுற்றுகளிலும் முன்னிலை

திருச்சி

திருச்சி மேற்குத் தொகுதியில் மாலை 5 மணியளவில் 16 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்துச் சுற்றுகளிலும் கே.என்.நேரு முன்னிலையில் உள்ளார்.

திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் கட்சியின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மீண்டும் போட்டியிட்டார். அதிமுக சார்பில் புதுமுகமான வி.பத்மநாதன் போட்டியிட்டார்.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் எண்ணப்படுகின்றன. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, மாலை 5 மணியளவில் 16 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அனைத்துச் சுற்றுகளிலும் கே.என்.நேரு கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

முதல் சுற்றில் கே.என்.நேரு 4,367 வாக்குகளும், வி.பத்மநாதன் 1,530 வாக்குகளும் பெற்றனர். மாலை 5 மணியளவில் 16 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அனைத்துச் சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கையிலும் கூடுதல் வாக்குகள் பெற்று, தொடர்ந்து கே.என்.நேரு முன்னிலை வகித்து வருகிறார். 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி திமுக வேட்பாளர் கே.என்.நேரு 67,022 வாக்குகளும், வி.பத்மநாதன் 19,715 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x