உதகையில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் வெற்றி

ஆர்.கணேஷ்
ஆர்.கணேஷ்
Updated on
1 min read

உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் வெற்றி பெற்றார்.

நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை உதகை அரசு பாலிடெனிக் கல்லூரியில் இன்று (மே 02) நடைபெற்று வருகிறது.

உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் காலை முதல் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் முன்னிலை பெற்று வந்தார். 11 சுற்றுகள் வரை பாஜக முன்னிலை பெற்று வந்தது.

ஆனால், அதற்குப் பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் முன்னிலை பெறத் தொடங்கினார். 22-வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 65 ஆயிரத்து 450 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் 59 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்றார். இறுதியில், ஆர்.கணேஷ் 5,623 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்ற ஆர்.கணேஷுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in