ட்விட்டர் ட்ரெண்டிங்கில் 'மு.க.ஸ்டாலின் எனும் நான்'; குவியும் வாழ்த்துகள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. அதிமுக கூட்டணி 75 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

அறுதிப் பெரும்பான்மையுடன் 10 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள ஆட்சிக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஒவ்வொரு மாநில முதல்வரும் பதவியேற்கும்போது தங்கள் பெயரைச் சொல்லிப் பதவியேற்பது வழக்கம். அந்த வகையில், 'மு.க.ஸ்டாலின் எனும் நான்' என்ற வாக்கியம் ஹேஷ்டேகாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

இதில், திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள், இளைஞர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். மு.க.ஸ்டாலினின் கடின உழைப்பே அவருடைய இந்த வெற்றிக்குக் காரணம் எனவும், அவர் பதவியேற்கும் நாளுக்காகக் காத்திருப்பதாகவும் பலரும் இந்த ட்வீட்டுகளில் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த ஹேஷ்டேகில் தற்போது வரை 33 ஆயிரத்து 800 பேர் ட்வீட் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in