

தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளும் அதிமுக கூட்டணி வசமாகும் வகையில், அந்த அணியின் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் 12ஆம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கே.பி.அன்பழகன் 52,564 வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகிறார். பென்னாகரம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜி.கே.மணி 7ஆம் சுற்று முடிவில் 31,966 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதேபோல் தருமபுரி தொகுதியில் 7ஆம் சுற்று முடிவில் பாமக வேட்பாளர் வெங்கடேஸ்வரன் 30,791 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 8ஆம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 41,886 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அரூர் தொகுதியில் 12ஆம் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி 49,583 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.
மொத்தத்தில் மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் காலை முதலே முன்னிலை வகித்து வரும் நிலையில், அவர்களே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவும் பாமகவும் தருமபுரி மாவட்டத்தில் தங்கள் வலிமையை நிலைநாட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.