நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா வெற்றி முகம்

நெடுங்காடு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்கா வெற்றி முகம்
Updated on
1 min read

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி முகம் காண்கிறார்.

இத்தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏவான சந்திர பிரியங்கா, நான்காவது சுற்று முடிவில் 10,774 பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஏ.மாரிமுத்து 8,560 வாக்குகள் பெற்றுள்ளார். கூட்டணியில் இத்தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படாததால், சுயேச்சையாக போட்டியிட்ட அக்கட்சியின் மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.விக்னேஸ்வரன் 5,606 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 4 சுற்று வாக்கு எண்ணிக்கை இருந்த நிலையில், 4 சுற்று வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. எனினும் வெற்றி, தோல்வி குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in