

கோவை தெற்கு தொகுதியில் மநீம வேட்பாளர் கமல்ஹாசன் 2,042 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, இத்தொகுதியில் மநீம வேட்பாளர் கமல்ஹாசன் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். அவருக்கு அடுத்த இடங்களை காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் பிடித்து வந்தனர்.
இந்நிலையில் 5-ம் சுற்று நிலவரப்படி கமல்ஹாசன் 11,409 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் 9,367 வாக்குகளும், பாஜகவின் வானதி சீனிவாசன் 8,575 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் அப்துல் வகாப் 1,198 வாக்குகளும், அமமுகவின் சேலஞ்சர் துரை என்ற துரைசாமி 221 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
இத்தொகுதியில் கமல்ஹாசன் 2,042 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.