Published : 02 May 2021 01:32 PM
Last Updated : 02 May 2021 01:32 PM

மீண்டும் திமுகவின் கோட்டையாகும் சென்னை: 14 தொகுதிகளில் முன்னிலை

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுக 14 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஏப். 06 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே. 02) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளில் திமுகவே முன்னிலை வகிக்கிறது. அண்ணாநகர் தொகுதியில் திமுகவின் எம்.கே.மோகன் 4,167 வாக்குகளுடனும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 21 ஆயிரத்து 654 வாக்குகளுடனும், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜே.ஜே.எபினேசர் 3,527 வாக்குகளுடனும், எழும்பூர் தொகுதியில் ஐ.பரந்தாமன் 9,631 வாக்குகளுடனும், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 6,395 வாக்குகளுடனும், மயிலாப்பூர் தொகுதியில் த.வேலு 10 ஆயிரத்து 82 வாக்குகளுடனும் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

அதேபோன்று, பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி.சேகர் 3,575 வாக்குகளுடனும், ராயபுரம் தொகுதியில் 'ஐ ட்ரீம்' மூர்த்தி 2,775 வாக்குகளுடனும், சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியனும், திருவிக நகர் தொகுதியில் தாயகம் கவி 8,952 வாக்குகளுடனும், ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன் 3,375 வாக்குகளுடனும், தி.நகரில் ஜெ.கருணாநிதி 4,954 வாக்குகளுடனும், வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றியழகன் 8,046 வாக்குகளுடனும், விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகரராஜா 4,819 வாக்குகளுடனும் முன்னிலையில் உள்ளனர்.

வேளச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா 9,062 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு, பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்தைவிடக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சென்னையில் 10 தொகுதிகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x