சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை; திமுக பின்னடைவு 

நா.கார்த்திக்
நா.கார்த்திக்
Updated on
1 min read

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் முன்னிலையில் உள்ளார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ நா.கார்த்திக், அதிமுக சார்பில் கே.ஆர்.ஜெயராம், மநீம சார்பில் மகேந்திரன் மற்றும் அமமுக, நாம் தமிழர், சுயேச்சை வேட்பாளர்கள் என 21 பேர் போட்டியிட்டனர்.

இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், ஆரம்பச் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் முன்னிலை வகித்து வருகிறார். 5-வது சுற்று நிலவரப்படி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் 11,583 வாக்குகள், திமுக வேட்பாளர் நா.கார்த்திக் 9,658 வாக்குகள், மநீம மகேந்திரன் 5,857 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

திமுக வேட்பாளரைக் காட்டிலும் , அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் 1,925 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். கோயம்புத்தூரில் உள்ள 10 தொகுதிகளில் கடந்த முறை சிங்காநல்லூர் தொகுதியில் மட்டுமே திமுக சார்பில் நா.கார்த்திக் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in