அதிமுகவுக்குத் தொடர்ந்து கைகொடுக்கும் மேற்கு மண்டலம்: மண்டல வாரியாக விவரம்

அதிமுகவுக்குத் தொடர்ந்து கைகொடுக்கும் மேற்கு மண்டலம்: மண்டல வாரியாக விவரம்
Updated on
1 min read

வாக்கு எண்ணிக்கையில் மண்டல வாரியாக வெளியான முடிவுகளில் மூன்று மண்டலங்களில் திமுக முன்னிலை பெற, வழக்கம்போல் மேற்கு மண்டலம் அதிமுகவுக்குக் கைகொடுத்துள்ளது.

திமுக, அதிமுகவுக்கு இடையேயான கடும் போட்டியாக இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. திமுகவுக்கு எப்போதும் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், தென் மண்டலங்களில் கணிசமான பகுதிகள் கைகொடுக்கும். அதே நேரம் மேற்கு மண்டலம் எப்போதுமே திமுகவுக்குக் கை கொடுக்காது.

ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் அனைத்து மண்டலங்களிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றது. ஆனாலும் இம்முறை மீண்டும் மேற்கு மண்டலத்தை அதிமுக தக்கவைத்துக் கொண்டுள்ளது.

நான்கு மண்டலங்களிலும் இரு கட்சிக் கூட்டணிகளுக்கும் உள்ள முன்னிலை விவரம்:

தென்மண்டலம் - திமுக 32, அதிமுக 19 தொகுதிகளில் முன்னிலை
வடக்கு மண்டலம்- திமுக 57, அதிமுக 43 இடங்களில் முன்னிலை
மத்திய மண்டலம் - திமுக 32, அதிமுக 9 இடங்களில் முன்னிலை
மேற்கு மண்டலம் - அதிமுக 29, திமுக 12 இடங்களில் முன்னிலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in