

காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், இறுதிச் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.வி.சுப்பிரமணியன் 12,215 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்தங்கியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் அடிப்படையில் என்.ஆர்.காங். கூட்டணி 7 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி என்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 1 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், இறுதிச் சுற்றின் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.என்.திருமுருகன் 12,362 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.வி.சுப்பிரமணியன் 12,215 வாக்குகள் பெற்று தொடர்ந்து பின்தங்கியுள்ளார்.
மொத்தம் 4 சுற்று வாக்கு எண்ணிக்கை இருந்த நிலையில், 4 சுற்று வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டன. எனினும் வெற்றி, தோல்வி குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை.