

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப். 06 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே. 02) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இத்தேர்தலில் சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின், அதிமுக கூட்டணியில் பாமகவின் கஸ்ஸாலி, நாம் தமிழர் கட்சியில் மு.ஜெயசிம்மராஜா, மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியில் ஐஜேகே சார்பில் முகம்மது இத்ரிஸ், அமமுக சார்பில் எல். ராஜேந்திரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இத்தொகுதியில், தற்போதைய நிலவரப்படி, உதயநிதி ஸ்டாலின் 14 ஆயிரத்து 448 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமகவின் கஸ்ஸாலி 3,452 வாக்குகளே பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். 10 ஆயிரத்து 996 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி முன்னிலையில் உள்ளார்.
திமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.