Last Updated : 02 May, 2021 12:19 PM

 

Published : 02 May 2021 12:19 PM
Last Updated : 02 May 2021 12:19 PM

அரியலூரில் தொடர்ந்து மதிமுக முன்னிலை; கைமாறிய ஜெயங்கொண்டம் தொகுதி

சின்னப்பா

அரியலூர்

அரியலூர் தொகுதியில் மதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜெயங்கொண்டம் தொகுதியில் தற்போது திமுக முன்னிலை வகிக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், அரியலூர் அடுத்த கீழப்பழுவூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (மே.2) எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 11 மணி வரை 3 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில், அரியலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் கு.சின்னப்பா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்

மதிமுக (திமுக) கு.சின்னப்பா - 12,053,
அதிமுக தாமரை எஸ்.ராஜேந்திரன் - 10,264,
அமமுக மணிவேல் - 210,
நாம் தமிழர் சுகுணாகுமார் - 1101,
ஐஜேகே ஜவகர் - 263,
நோட்டா - 144 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில் மதிமுக வேட்பாளர் சின்னப்பா, அதிமுக வேட்பாளர் தாமரை எஸ்.ராஜேந்திரனை விட 1,789 வாக்குகள் கூடுதலாகப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதி

முதல் 3 சுற்றுகள் வரை அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு, திமுக வேட்பாளர் க.கண்ணனை விட 1,955 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை பெற்று வந்தார். 4-வது சுற்று எண்ணப்பட்ட நிலையில், திமுக வேட்பாளர் க.கண்ணன், பாமக வேட்பாளர் கே.பாலுவை விட 419 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் உள்ளார். தொடர்ந்து சுற்றுகள் எண்ணப்பட்டு வருகின்றன.

குறைவான வாக்குகள் வித்தியாசம் உள்ளதால் எந்த அணி முன்னிலை வகிக்கும், வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் இரு கட்சியினரும் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x