

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் முதல் இரண்டு சுற்று முடிவுகளில் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பதிவான வாக்குகள் கரூர் மாவட்டம் தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில், பாதுகாப்பு அறைகளில் 3 அடுக்குப் பாதுகாப்புடன், சிசிடிவி கண்காணிப்பில் வைக்கப்பட்டன. அவற்றை எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக அக்கட்சி மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். இதனால் இத்தொகுதி கவனம் பெற்ற தொகுதியானது.
இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதிக்கான முதல் சுற்று முடிவில்
திமுக இளங்கோ 2717,
பாஜக அண்ணாமலை 2517,
அமமுக தங்கவேல் 41,
மநீம முகமது ஹனீப் சகில் 24,
நாம் தமிழர் கட்சி அனிதா பர்வீன் 164,
நோட்டா 23 ஆகிய வாக்குகளைப் பெற்றனர்.
2-வது சுற்று முடிவிலும் திமுக 583 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி,
திமுக- 3064
பாஜக - 2681
அமமுக 57,
மநீம 29,
நாம் தமிழர் கட்சி 264,
நோட்டா 0 வாக்குகளைப் பெற்றுள்ளன.
இதனால் அண்ணாமலை பின்னடவைச் சந்தித்துள்ளார்.