

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 02) காலை 8 மணிக்குத் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், முதல் 3 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
இதன்படி, திருச்சி கிழக்கில் திமுக வேட்பாளர் எஸ்.இனிகோ இருதயராஜ் முதல் மூன்று சுற்றுகளில் முறையே 3,606, 3,125, 3,048 என மொத்தம் 9,779 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் வெல்லமண்டி என்.நடராஜன் 1,800, 1,777, 2,150 என 5,727 வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
திருச்சி மேற்கில் திமுக வேட்பாளர் கே.என் நேரு 4,367, 4,449, 4,136 என 12 ஆயிரத்து 952 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் வி.பத்மநாதன் 1,530, 1,193, 1,644 என 4,367 வாக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.