காரைக்கால் வடக்குத் தொகுதி: மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பின்னடைவு

காரைக்கால் வடக்குத் தொகுதி: மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பின்னடைவு
Updated on
1 min read

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு, அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்கள் என, 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி என்.ஆர்.காங்கிரஸ் 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

காரைக்கால் மாவட்டம், காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில், இரண்டாவது சுற்று முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.என்.திருமுருகன் 7,452 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவருமான ஏ.வி.சுப்பிரமணியன் 6,490 வாக்குகள் பெற்று பின் தங்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in