

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், முதல் சுற்று அடிப்படையில் முன்னிலை வகிக்கிறார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில், மயூரா எஸ்.ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாஜக சார்பில் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், அதன் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்துல் வகாப், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இன்று (மே 02) வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று வாக்குகளின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 860 வாக்குகள் பெற்றுள்ளார்.