Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த 6 நாட்களில் ரூ.2.35 கோடிக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை

இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ‘ரெம்டெசிவிர்’ மருந்து வாங்க, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நேற்று நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் 6 நாட்களில் ரூ.2.35 கோடிக்கு ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ உள்ளிட்டபல ஊசி மருந்துகள் கொடுக்கப்படுகிறது. தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகளால் நிரம்பிவழிகின்றன. இதனால், ‘ரெம்டெசிவிர்’ மருந்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

மருந்து தட்டுப்பாட்டால் அவதி

தனியார் மருத்துவமனைகளில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து இல்லாததால், வெளியில் சென்று வாங்கி வருமாறு நோயாளிகளின் உறவினர்களிடம் மருத்துவர்கள் சொல்கின்றனர். அவர்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டை வைத்துக் கொண்டு கடை கடையாக அலைந்து வருகின்றனர். ஆனால், எந்த மருந்து கடைகளிலும் மருந்து இருப்பு இல்லை. கள்ளச்சந்தையில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை கடந்த 26-ம் தேதிதொடங்கப்பட்டது. மருந்து வாங்கவருபவர்களின் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்ததால், மருந்து விற்பனை, அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டது.

பலமணி நேரம் காத்திருப்பு

நோயாளிகளின் குடும்பத்தினர் உரிய ஆவணங்களுடன் வந்து பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர். கூடுதல் கவுன்ட்டர்களை திறந்து 24 மணி நேரமும் மருந்து விற்பனை செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மருந்து விற்பனை மையங்களை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழக மருத்துவபணிகள் கழக மேலாண்மை இயக்குநர் உமாநாத் கூறும்போது, “உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு ஒரு குப்பி ரூ.1,568 என 6 குப்பிகள்வழங்கப்படுகிறது. 6 நாட்களில் 15 ஆயிரம் ‘ரெம்டெசிவிர்’ குப்பிகள்ரூ.2 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ரெம்டெசிவிர்’ மருந்து பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x