வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே முன்னாள் அமைச்சர் வெற்றி பெற்றதாக திருப்பூரில் சுவரொட்டி

திருப்பூர் குமார் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வாக்களித்தவர்க ளுக்கு நன்றி தெரிவித்து  நேற்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
திருப்பூர் குமார் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வாக்களித்தவர்க ளுக்கு நன்றி தெரிவித்து நேற்று ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி.
Updated on
1 min read

திருப்பூர் குமார் நகர், அவிநாசி சாலை என பல்வேறு பகுதிகளில், பல்லடம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெற்றி பெற்றதாகநேற்று சுவரொட்டி ஒட்டப்பட்டிருந் தது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, ‘‘திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதி இது. ஆனால் முன்னாள்அமைச்சர் பல்லடம் தொகுதியில்தான் போட்டியிடுகிறார். ஆனந்தனின் வீடு இங்கிருப்பதால், இப்படி செய்துள்ளதாக தெரிகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே ‘வெற்றி வெற்றிவெற்றி’ என்றும், ’எல்லா புகழும் வாக்காள பெருமக்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த வாக்காள பெருமக்களுக்குநன்றி’ என அதில் குறிப்பிட்டுள்ள னர். சுவரொட்டியில் அக்கட்சி பிரமுகர் பாஸ் (எ) பாஸ்கரன் என குறிப்பிடப்பட்டுள்ளது,’’ என்றனர்.

இதுதொடர்பாக எம்.எஸ்.எம். ஆனந்தன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நபர் தான் பாஸ்(எ) பாஸ்கரன். எதற்கு இன்றைக்குசுவரொட்டி ஒட்டினார் என்று தெரியவில்லை. மே 3 அன்று ஒட்டியிருக்க வேண்டிய சுவரொட்டியை, இன்றே ஒட்டிவிட்டார் என நினைக்கிறேன். ஒரு நாள் பொறுத்திருக்கலாம். எனக்கு தகவல் தெரியவில்லை. இது தொடர்பாக அவரிடம்கேட்கிறேன். ஏதாவது ஆர்வக்கோ ளாறில் செய்திருப்பார்,’’ என்றார்.

பல்லடம் தேர்தல் நடத்தும் அலுவலர் வி.கணேசன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக அப்படி செய்யக்கூடாது. இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. இது தொடர்பாக விசாரிக்கிறோம்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in