கோயில்கள் மூடப்பட்டதால் பூக்கள் விலை சரிவு: சம்பங்கி கிலோ ரூ.10-க்கு விற்பதால் சாலையில் கொட்டும் அவலம்

சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரான சம்பங்கிக்கு உரிய விலை கிடைக்காததால், சாலையோரங்களில் கொட்டிச் செல்லும் விவசாயிகள்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரான சம்பங்கிக்கு உரிய விலை கிடைக்காததால், சாலையோரங்களில் கொட்டிச் செல்லும் விவசாயிகள்.
Updated on
1 min read

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால், பூக்களின் விலை வெகுவாகக் குறைந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், கெஞ்சனூர், தாண்டாம்பாளையம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, பெரியகுளம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி,கோழிக்கொண்டை உள்ளிட்ட பல்வேறு வகையானமலர்கள் சாகுபடி செய்யப்படு கின்றன.

இங்கு விளையும் பூக்கள் தினசரி பறிக்கப்பட்டு சத்திய மங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா,கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த மாதத்தில் யுகாதி பண்டிகை, தமிழ் புத்தாண்டுஎன தொடர்ச்சியாக விசேஷ நாட்கள் இருந்ததால் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் நல்ல விலைக்கு விற்பனையானது. தற்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், கோயில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பூக்களின் விலை மற்றும் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில், மிகக்குறைவாக சந்தைக்கு வரும் ஜாதி மல்லி கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது. ஆனால், மாலைஉள்ளிட்டவற்றிற்கு பயன் படுத்தப்படும் சம்பங்கி, கோழிக்கொண்டை, செண்டுமல்லி போன்ற பூக்கள் கிலோ ரூ.10-க்குவிற்பனையானது. இதனால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல், சாலைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள் ளது. கடந்த இரு நாட்களில் 20 டன் அளவுள்ள சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் சாலையோரங்களில் கொட்டிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் பூக்களின் விலை விவரம் (கிலோ): ஜாதிமல்லி ரூ.500, மல்லிகை ரூ.140, முல்லை ரூ.80, காக்கடா ரூ.100, கனகாம்பரம் ரூ.80, செவ்வந்தி ரூ.70, செண்டுமல்லி ரூ.10, கோழிக்கொண்டை ரூ.10, சம்பங்கி ரூ.10.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in