ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பித்தவர்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு
Updated on
1 min read

ஹஜ் பயணத்துக்கு 2 தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்பதால், அதற்கு விண்ணப்பித்தவர்கள் முதல் தவணை தடுப்பூசியை தற்போது போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சிறுபான்மையினர் நலத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் மற்றும் ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் மின்னஞ்சல்படி, சவுதி அரேபியாவுக்கு வரும் புனிதப் பயணிகள், புறப்படுவதற்கு முன் 2 தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று மும்பையிில் உள்ள இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

இந்திய பயணிகள் ஹஜ் 2021-ல்புனித பயணம் மேற்கொள்ள நேரிட்டால், ஜூன் மாத மத்தியில் இயங்கும்விமானங்கள் மூலம் செல்லல்லாம். ஹஜ் 2021-க்கு விண்ணப்பித்தவர்கள் இப்போது தாங்களாகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மேலும், புறப்படும் நேரத்தில் 2- வது தவணை தடுப்பூசி அவர்களுக்கு அளிக்கப்படும். எனவே, பயணத்தில் இடையூறு ஏற்படாமல் இருக்க பயணிகள் முன் கூட்டியே தடுப்பூசி செலுத்திக் கொண்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள னர். ஹஜ் 2021 தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் சவுதி அரசிடம் இருந்து இதுவரை பெறப்படவில்லை. அனைத்து செயல்முறைகளும் சவுதி அதிகாரிகளின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in