வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை

வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: விக்கிரமராஜா கோரிக்கை
Updated on
1 min read

வெள்ளத்தால் வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கெடுத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் முதல் வரின் தனிப்பிரிவில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதா வது: சென்னை உள்ளிட்ட 4 மாவட் டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1 லட்சம் வணிகர்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. சில்லறை வணிகர் களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தனி அதிகாரியை நியமித்து, வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் 18 லட்சம் வணி கர்கள் நேரடியாகவும், மறைமுக மாகவும் தமிழக அரசுக்கு மதிப்புக் கூட்டு வரி செலுத்தி வருகின்றனர். இந்த வருவாயில் 1 சதவீதத்தை வணிகர் நலவாரியத்துக்கு ஒதுக்கி, அதன் மூலமாக நிவாரண உதவி வழங்க வேண்டும். மின் கட்டணம் மற்றும் வணிகவரி செலுத்த 3 மாத அவகாசம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். முத்ரா வங்கி மூலம் வட்டியில்லா கடன் வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in